பலாப்பழ கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்!

image 2021 05 28 214222
image 2021 05 28 214222

பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.

பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம். இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

பலாப்பழ கொட்டைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது.

பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.

பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது.

புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. பலாப்பழக் கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.

பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுவதால் வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்.