மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்து காணப்படும் அதிமதுரம்!

image 2021 05 28 223642
image 2021 05 28 223642

அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.

அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாட்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும்.

மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.

அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.