உடல்வலியை நீக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!

image 2021 05 29 204554
image 2021 05 29 204554

பொதுவாக உடல் வலி என்பது நம் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளின் அறிகுறி தான். பொதுவாக இந்த உடல் வலி பெரிதாக எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை, என்றாலும் சிகிச்சைக்கு முன்னர், இந்த வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது நல்லது.

திரிகடுகு சூரணத்தை அரை கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து தினமும் காலையில் சாப்பிட உடல் வலி நீங்கி நல்ல சுறுசுறுப்பாகும்.

அமுக்கிரா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வலி நீங்கி உடல் நல்ல புத்துணர்ச்சி பெறும். மேலும் நரம்புத்தளர்ச்சி நீக்கும் ஆண்மை அதிகரிக்கும்.

ஓரிதழ் தாமரை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர உடல் வலி நீங்கி நல்ல புத்துணர்வு பெறும்.

இதை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது ஜூஸ் செய்து வாரம் இருமுறை பருகிவரலாம் இது மனஅழுத்தத்தை குறைத்து உடலை நல்ல சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

கிராம்பை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர உடல் வலி நீங்கும். மேலும் உடல் உறுப்புகள் நல்ல பலம் பெறும்.

தேவையான பொருட்கள்: ஒரு தேக்கரண்டி லவங்கப் பட்டை தூள், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், தேன். செய்முறை: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் ஒரு தேக்கரண்டி லவங்கப்பட்டை தூளை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். தேனை கலந்தவுடன் இதனைப் பருகவும்.

இந்த கலவையை தினமும் ஒரு முறை பருக வேண்டும். பல்வேறு உணவுகளில் நறுமனத்திற்காக சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருள் லவங்கப்பட்டை. இந்த லவங்கப் பட்டையில் சக்தி மிக்க அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளன. இதனால் இதனை உடல் வலிக்கான தீர்வுகளில் பயன்படுத்தி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தினை அதிகரிக்கலாம்.