சோம்புவை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !

4f92f770d55bb8e2123f04a3b2e5deba8fe0c89d7c3e8aed8961843a2b197949
4f92f770d55bb8e2123f04a3b2e5deba8fe0c89d7c3e8aed8961843a2b197949

சோம்பை வாயில் போட்டு சுவைப்பது, மணத்துக்காக மட்டுமல்ல, செரிமானத்திற்காகவும் தான். நமது வயிற்றை தளர்த்தி, உணவை ஜீரணிக்க உதவுகிறது பெருஞ்சீரகம். பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்வு பெற்று பிரகாசமாகிறது. சோம்பு ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பான். ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும்.

சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். பெருஞ்சீரகம் போட்டு ஆவி பிடித்தால், கண்களின் ஒளி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால், அரை டிஸ்பூன் சோம்பை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மென்று சாப்பிடுங்கள். இது, வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும். மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், பெருஞ்சீரகம் சாப்பிடலாம். வெல்லத்துடன் சேர்த்து சோம்பை சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தில் வரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

சோம்பில் குறிப்பாக விற்றமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடிப்பது அஜீரணத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரகத் தேநீர் குடிப்பது இருமலை குணப்படுத்தும். அதோடு, பெருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு அபாயம் குறையும். தினமும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஆழ்ந்த உறக்கம் வரும்.