தினமும் கரட் பானம் குடிப்பதன் பயன்கள்

1598861088 8893
1598861088 8893

கரட் பானத்தில் இருக்கும் சத்துக்கள் : கரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. விற்றமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது.

கரட், கரட் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். மேலும் கரட்டினை மென்று சாப்பிட்டும் போது பற்களின் கறைகள் போய்விடுகிறது.

கரட் பானம் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். தினமும் கரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும்.

தினந்தோறும் கரட் பானம் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். மேலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வராது.

தினமும் கரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன. தினமும் கரட்டினை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. தினமும் கரட் பானம் அருந்துவது நமது கல்லீரலின் நலத்திற்கும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது.