முகத்தில் தோன்றும் சுருக்கங்களை போக்க உதவும் தக்காளி

1542018283 8899
1542018283 8899

தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள்.

ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.

தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். இதை செய்வதால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு துருவல் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் மின்னும்.

தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமம் மிருதுவாவதை காணலாம்.

தக்காளி சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.