மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொய்யாப்பழம் !

1564641084 4031
1564641084 4031

கொய்யா பழத்தில் “விற்றமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த விற்றமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.

கொய்யா பழம் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு பழமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த ஒரு இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.

தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.

கொய்யா பழத்தில் “லைக்கோபீனே, க்வெர்செடின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளருவதை தடுப்பதில் பேருதவி புரிகிறது. புற்று பாதிப்பு கொண்டவர்களும், புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்களும் கொய்யா பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

கொய்யா பழத்தில் “விற்றமின் பி 9” என்கிற சத்தும், “போலிக் அமிலம்” அதிகம் உள்ளது. இந்த சத்துகள் வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் பணியை செய்ய அவசியமானதாகும்.

பற்கள் உடைந்து விடுவது, உடலின் எலும்புகள் வலுவிழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இயற்கையிலேயே அதிகளவு விற்றமின் சி சத்துகள் அதிகம் நிறைந்த கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவது சிறந்ததாகும்.