தினசரி முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை சீராக்குமா?

1526037386 0487
1526037386 0487

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டையில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை தான். ஆனால் அதில் விற்றமின்களும், கனிமங்களும் கூட அடங்கியுள்ளது. இது உங்கள் உடல் செயற்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமானவையாகும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள்.

மூளையின் இயல்பான செயல்பாட்டுக்கு தேவையான விற்றமின்கள் பி 6 மற்றும் பி 12, ஃபோலேட் மற்றும் கோலின் உள்ளிட்ட பல ச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக முட்டை உள்ளது.

கோலின் ஒரு முக்கியமான ஊட்டசத்து ஆகும், இது உடலில் அசிடைல்கொலின் உருவாக்க உதவுகிறது, இது மனநிலை மற்றும் நினைவகத்தை சீராக்க உதவும் நியோரோ-ட்ரான்ஸ்மிட்டர் ஆகும்.

தினசரி உணவில் முட்டைகளை சேர்ப்பதன் மூலம் கோலின் சத்தைப் பெற ஒரு எளிய வழியாகும், ஏனெனில் இந்த ஊட்டச்சத்தின் அதிக செறிவூட்டப்பட்ட ஆதாரம் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளன.