முகச்சுருக்கங்கள் தடுக்கும் தக்காளி சாறு

1586683046 6344
1586683046 6344

தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும்,

மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.

கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன.

நன்கு பழுத்த தக்காளி இரண்டு எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் மற்றும் விதைகளை நீக்கிவிடுவது நல்லது.

கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது

தக்காளியை தோல் மற்றும் விதையை நீக்கி சாறு தயாரித்து குடிப்பதால், அவை சிறுநீர் கிருமித்தொற்றை நீக்குகிறது.