சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

1526297273 3854
1526297273 3854

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலிற்கு தேவையாக ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும்.

100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இரும்பு, கல்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் இதில் உள்ளது.

மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கையான நோய் எதிர்ப்பு பொருட்களாகும். இது உடலில் விற்றமின் ஏ ஆக மாறிவிடும். இதனால் தேக ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும் உதவும்.

கிழங்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும்.

கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் இலைகளில் அதிக அளவில் இரும்பு, விற்றமின் சி, விற்றமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை உள்ளது.