எண்ணிலடங்காத மருத்துவ நன்மைகள் கொண்ட குப்பைமேனி இலை!

1559108472 8778
1559108472 8778

ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் உண்மையில் ரத்தம் கெட்டுப் போனால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

அதாவது முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு இளமையில் முதுமையா காணப்படுதல் உடல் எரிச்சல் தலை சுற்றல் கண் பார்வை மங்குதல், மூட்டு வலி முடி உதிர்தல், உடல் சோர்வு ஏற்பட ரத்தம் சுத்தம் இன்மையும் ஒரு காரணம் எனவே இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். இப்படி ரத்தத்தை சுத்தமாக்கி உடலை பலம் பெற வைக்கும் ஒரு மூலிகை தான் இந்த குப்பைமேனி கீரை

இதற்கு ஒரு குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு நன்கு அலசி அதனுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு எடுத்து விழுங்கி விட வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அசுத்த ரத்தம் சுத்தமாகி இரத்த ஓட்டமும் இதனால் உடல் தளர்ச்சி நீங்கி புத்துணர்வு உண்டாகும்

அதே போன்று ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் குப்பைமேனிக் கீரையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி உடனே குறையும். அதே போன்று சிறியவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனை குடல் புழுக்கள் இதற்கு சிறந்த தீர்வு இந்த குப்பைமேனி கீரை.

குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி சுக்கு வெள்ளைப் பூண்டு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள புழு பூச்சிகள் மொத்தமும் இருந்து மலம் வழியாக வெளியேறி விட முக்கியமாக இது மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது

குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகை மூலமும் குணமாகிவிடும் அதேபோன்று குப்பைமேனி இலையை அரைத்து வாய்வழியாக சிறிய நெல்லிக்காய் அளவு உட்செலுத்த நாள்பட்ட மலக்கட்டு நீங்கும் மேலும் இந்த இலையை சாறு எடுத்து சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும் நீங்கும்.