இரத்த சோகைக்கு இந்த மருத்துவத்தில் தீர்வு!

335528a3d5744a75ad1381b5361595aeb3ae497f9708bd7f88c43edf4d9f84af
335528a3d5744a75ad1381b5361595aeb3ae497f9708bd7f88c43edf4d9f84af

இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் (ஹீமோகுளோபின்) குறைவாக இருப்பதைத்தான் இரத்த சோகை என்று குறிப்பிடுகிறோம். இந்த இரத்த சோகைக்கு காரணம் பலவாக இருந்தாலும் முக்கிய காரணமாக விளங்குவது இரும்புச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்ணுவதும் அதிக இரும்புச்சத்து மிக்க உணவுகளை தவிர்ப்பதுமே ஆகும். அதிகப்படியான வளரும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

  • அதிகப்படியான மருந்து மாத்திரைகள்
  • மூலத்தில் ரத்த கசிவு
  • அதிகப்படியான மாதவிலக்கு ரத்தப்போக்கு
  • குடலில் உள்ள கொக்கிப்புளுக்கள் மேலே சொன்ன இவை அனைத்துமே ரத்த சோகைக்கு காரணம் எனலாம். இந்த இரத்த சோகையினால் பல உடல் உபாதைகள் ஏற்படுவதுண்டு அவை
  • உடல் சோர்வு
  • மயக்கம்
  • நெஞ்சு படபடப்பு
  • களைப்பு
  • சதைப்பிடிப்பு
  • நரம்பு இழுப்பு
  • கால்வீக்கம்
  • தலைவலி
  • குமட்டல்
  • பசியின்மை போன்றவை ரத்த சோகை உள்ள பெண்கள் ஒழுங்காக மாதவிடாய் ஏற்படுவதில்லை. இந்த பிரச்சினை உள்ள குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் எதிலும் நாட்டம் இல்லாமல் காணப்படுவார்கள். இந்த இரத்த சோகையை சின்ன சின்ன அறிகுறிகள் தென்படும்போது கண்டறிந்து அதை களைந்துவிடுவது சாலச்சிறந்தது. இல்லையென்றால் மிகப்பெரிய வியாதிகளுக்கு இந்த இரத்த சோகையே காரணமாகிவிடும் என்பது உறுதி. இப்படிப்பட்ட இரத்த சோகையை அக்குபஞ்சர் சிகிச்சையால் சரி செய்துவிட முடியும் என்பது திண்ணம். கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது இரத்தச்சோகை/குருதிச்சோகைக்குக்கு சிறந்த தீர்வை வழங்கும்.