சருமத்தை இளமையாக வைக்க உதவும் குறிப்புகள்

1633671794 7698
1633671794 7698

திராட்சையில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்கம்.

ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக இருக்கும்.

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.

உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.

உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.