இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் கொத்தமல்லி இலை!

1615016732 0691
1615016732 0691

சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

கல்லீரல் சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும் அல்லது தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தாலும் அது குணமாகிறது. மாரடைப்பு இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.

கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.

கண் சம்பந்தமான பிரச்சனைகள் கொத்தமல்லி இலைகளில் விற்றமின் சி, விற்றமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.

சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.