உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க உதவும் உணவுகள்!

1635326081 8863
1635326081 8863

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

பச்சை காய்கறிகளான கீரை வகைகள், கோவை மற்றும் பீன்ஸ் இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்து வர உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கீரை வகைகளில் பசலைக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை கரைப்பதில் எலுமிச்சை சிறந்து விளங்குகின்றது.

இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை. இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

அதிக நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் விற்றமின்-டி நிறைந்துள்ள பழம் அவகோடா. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பினை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டில் அலிசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருள் நிறைந்திருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.