உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி

1599033684 9025
1599033684 9025

நெல் மற்றும் மற்றும் பயிர்கள் விளையாத நிலங்களில் குதிரைவாலி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இதில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளது. கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

செரிமான பிரச்சனைகள், ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை அதிகமாக பெருக செய்கிறது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.

குதிரைவாலியில் ஊட்டச்சத்துகள் மிகுந்த நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் உள்ள மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை வெளியிடுவதற்கு பெரிது உதவுகிறது. நோயளிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக பயன்பட்டு வருகிறது.

உடல் எடையைக் குறைக்கவும், இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கவும்,ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் வேலை செய்கிறது.

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடவேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும். உடல் உறுப்புகளை தூய்மையாக்க பெரிதும் பயன்படுகிறது.