வயிற்றுப் புண்ணை நொடியில் குணமாக்கும் அதிசய மூலிகை பானங்கள்

a369b9e18b2632e962507f1c4e653588
a369b9e18b2632e962507f1c4e653588

உணவே மிக சிறந்த மருந்து. உணவால் மட்டுமே வயிற்றுப் புண்ணை முழுமையாக குணப்படுத்த முடிடியும்.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மூலிகை பானங்கள்

மாதுளம்பழ ஜூஸ்

மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அகத்திக் கீரை பானம்

வயிற்றுப் புண்ணை குணப்படுத்த அகத்திக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம்,மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம்.

துவரம்பருப்பு பானம்

துவரம் பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

அருகம்புல் சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுங்கள்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றது.

மூலிகை மோர்

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்.

 அரிசி கஞ்சி சாதம்

வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

  யாருக்கெல்லாம் அல்சர் தாக்கும் வாய்ப்புள்ளது ?

புகை பிடிப்பவர்களுக்கு, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, வாயுக் கோளாறினால் அவதிபப்படுபவர்களுக்கு, அதிக ஸ்ட்ரெஸினால் இருப்பவர்களுக்கு, காலை உணவை தவறு விடுபவர்களுக்கு, எப்போதும் சுயிங்கம் மெல்பவர்களுக்கு, என இவர்களுக்கெல்லாம் அல்சர் தாக்கும் ஆபத்து உள்ளது.