தலைமுடி உதிர்தல் பிரச்சினையை போக்க உதவும் சிகைக்காய்

sik
sik

இயற்கையாக கிடைக்கும் சிகைக்காய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கி அழகான மிருதுவான தோற்றத்தை வழங்கும்.

சிகைக்காயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது என்பதால் உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கும். தவறாமல் பயன்படுத்தினால் பொடுகுப் பிரச்சினையைக் குணப்படுத்த உதவும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய் பொசி தேய்க்க தேகத்தில் உள்ள அழக்கை அகற்றும். சொறி, சிரங்கு முதலியவற்றை நீக்கும். தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் செழிப்பாக வளர செய்யும். பொடுகை நீக்கும்.

சிகைக்காய் முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதன் விளைவாக வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி கிடைக்கும். அதோடு முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.

எண்ணெய் தேய்த்துக்கொண்டு கழுவாமல் இருக்கும் உச்சந்தலையில் சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் உச்சந்தலைக்கு போஷாக்கு கிடைக்கும். தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

சிகைக்காய் தேய்த்து குளிப்பதால் இளமைப் பருவத்திலேயே நரை முடி தொல்லை இருக்காது. இது உங்கள் தலைமுடியின் இயல்பான இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

பேன் தொல்லை இருந்தால், சிகைக்காய் தேய்த்து குளித்தால் குணமாகும். தலை அரிப்பினால் சிறு காயங்கள் ஆகியிருந்தால் சிகைக்காய் தேய்த்து குளிக்கும்போது நாளடைவில் அந்த பிரச்சினை குணமடையும். சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி சிக்கல் விழாமல் நன்றாக இருக்கும்.