உங்களுக்கு மனஅழுத்தம் நோய் உள்ளதா? ஒரு மருத்துவ குறிப்பு

download 28
download 28

பொது மருத்துவம்:மனஅழுத்தம் என்பது தற்காலத்தில் அதிகமானோரால் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் மன அழுத்தத்திற்கு அடித்தளமாக அமைகின்றன.

மன அழுத்தம் உடலில் ஏற்படும் ஒரு ஹோர்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்த மாற்றம் மூளையின் ஹைப்போதலாமஸ் என்று சொல்லப்படுகின்ற பகுதியில் இருந்து ஏற்படும் தூண்டலினால் நரம்பு மணடலம் ஊடாக உடல்வரை பரவுகின்றது. நாம் மன அழுத்தத்திற்கு உட்பட்டு இருக்கும் போது ஹைப்போதலாமஸ் இனால் நரம்பு மண்டலம் ஊடாக சிறுநீரகத்திற்கு செல்லும் சமிக்ஜை ஹோர்மோன்களை சுரக்க செய்கிறது.இந்த ஹோர்மோன் இல் அடிர்னலின் மற்றும் கோர்ட்டிசோல் என்பனவும் உள்ளடங்கும்.

ஆண்களை விட பெண்களே அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாக சொல்லப்படுகின்றது.பெண்களே மன அழுத்தத்திற்கு உட்பட்டு இருக்கும் போது அதிகமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.அதனால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு உட்படவில்லை என எடுத்துக்கொள்ள முடியாது..ஆண்கள் மன அழுத்தததில் இருந்து தப்பிக்க அதிகமான முயற்சிகளை மேற்கொள்வதால் ஆண்களிடம் இருந்து அறிகுறிகள் வெளிப்படுவது குறைவு.

மன அழுத்தம் என்றால் என்ன?
மன அழுத்தம்
மன அழுத்தம் உங்கள் உடல் சமநிலையை சீர்குலைய செய்யலாம். கைகள் நடுங்குவது,மயக்க நிலை போன்றன கூட ஏற்படலாம். இவற்றுக்கு ஹோர்மோன்களின் தொழிற்பாடே காரணம். மன அழுத்தம் உங்கள் உடலை சூடாக வைத்திருப்பதை நீங்கள் உணரலாம். ஒரு பொது மேடையில் ஏறிநின்று மக்கள் முன்பு கதைக்கும் போது உங்கள் உடல் சூடாக இருப்பதாய் நீங்கள் உணரக்கூடும். இது ஒரு வகையான மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான்.

மன அழுத்தத்தினால் உங்கள் உடலில் செரிமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால் வயிற்றுவலி, வயிற்று போக்கு மற்றும் அதிக அளவு சிறுநீர் வெளியேற்றம் என்பன ஏற்படலாம்.

மன அழுத்தம் காரணமாக ஒரு வித எரிச்சலூட்டும் மனப்பான்மையும்,அதிக அளவான கோபமும் ஏற்படலாம். இது நமது நித்திரை அட்டவணையை கூட பாதிக்கலாம். அதிக தனிமையில் இருப்பவர்கள் மனவழுத்தத்தில் இருப்பார்கள். அப்படியானவர்கள் பகல் நேரங்களில் அதிகம் தூங்குவார்கள்.

இதை வாசிக்கவும் -தூக்கத்தை பற்றி நமக்கு தெரியாத சுவாரஸ்யமான 10 உண்மைகள்
அதிகமான தூக்கம்
கடுமையான தலைவலி சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. இவை பெரும்பாலும் டென்ஷன் தலைவலி என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தலைவலி உங்களுக்கு ஏற்படுமாயின் அது உங்களை உடல்ரீதியாக மிகவும் பாதிக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவான மன அழுத்தம் அவர்களின் மாதவிடாய் வட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். சில பெண்கள் தங்கள் மாதவிடாயை கூட இதனால் தவற விடலாம்.

மன அழுத்தத்தால் தலைவலி

நீண்ட கால மனவழுத்தத்திற்கு சிலர் போதை பொருட்களை பயன்படுத்துவதையும் சிகரெட் புகைப்பதையும் சிறந்த நிவாரணமாக கருதுகின்றனர். இதனால் உடலுக்கு தீங்குகள் மிக அதிகமாக ஏற்படும்.

மன அழுத்தத்தில் இருப்பதால் அது ஒரு தம்பதியின் தாம்பத்திய உறவில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்..அதிக மனவழுத்தம் உடலுறவின் மீதான நாட்டத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

மன அழுத்தம் குடலில் புண்கள் ஏற்படுபவத்ற்கு காரணமாக அமையாது..ஆனால் ஏற்கனவே இருக்கும் புண்களின் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கும். தொடர்ச்சியாக மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய நோய்களுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

உங்கள் நாளாந்த அழுத்த நிலைகளில் உறவுகள் பெரும் பங்கு வகிக்கலாம். வீட்டில் ஏற்படும் சண்டைகள்,குடும்ப உறவில் ஏற்படும் மனஸ்தாபங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்காமை என்பன மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இன்று ஒவ்வொருவரது வாழ்க்கையும் தினமும் அதிக வேலை, பாடசாலை வாழ்க்கை, குழந்தைகளை வளர்த்தல் போன்றவற்றால் மன அழுத்தம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விடயமாக மாறிவிட்டது. மனவழுத்தம் இல்லாத ஒரு நாளை ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்துவது சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக மாறிவிட்டது.