மிளகு கீரை எண்ணெய் அல்லது புதினா‌ எண்ணெய் பயன்படுத்துவதன் நன்மைகள்!

samayam tamil 3
samayam tamil 3

மிளகு கீரை எண்ணெய் அரோமா தெரபியில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய் வகைகளில் ஒன்றாகும். இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

1 வேதியியல் கூறுகள்:
2 மிளகு கீரை எண்ணெய் நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
2.1 சைனஸ்
2.2 வலிநிவாரணி
2.3 பக்டீரியா எதிர்ப்பியாக செயல்படுகிறது
2.4 செரிமானம்
2.5 தலைவலி
2.6 மனசோர்வு, பதற்றம் போன்றவற்றை சரிசெய்கிறது
2.7 மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது
2.8 சரும ஆரோக்கியத்தை மேம்படுகிறது
3 பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்:
இவை‌ லேமினேசியே குடும்பத்தை சேர்ந்தவை. இதன் வகை மென்தா பிப்பெரிட்டா. விற்றமின்-எ , விற்றமின் சி, பொட்டாசியம், கல்சியம், பாஸ்பரஸ், ஒமேகா-3 அமிலம் ஆகிய ஊட்டச்சத்துக்களை மிளகு கீரை எண்ணெய் கொண்டுள்ளது. இவை நமக்கு உடல் மற்றும் மனரீதியாக எண்ணற்ற பலன்களை அளிக்கிறது.

வேதியியல் கூறுகள்:
மென்தால், மென்தோன், மென்தெயில் அசிட்டேட், 1,8-சினோலீ, லிமோனின், பீட்டா காரியோஃபைலின்.

மிளகு கீரை எண்ணெய் நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
சைனஸ்
மிளகு கீரை எண்ணெய் பயன்படுத்தி நீராவி பிடிப்பதன் மூலம் சைனஸ் பிரச்சினைகள், நுரையீரல் நெரிசல், நுரையீரல் தொற்று ஆகியவற்றை சரிசெய்கிறது. இதில் உள்ள 1,8- சினோலி மியூகோலைடிக்காக செயல் புரிந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

வலிநிவாரணி
மென்தால் வலிநிவாரணி பண்பு கொண்டது. உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் வலி நீங்குகிறது.

பக்டீரியா எதிர்ப்பியாக செயல்படுகிறது.
பக்டீரியா எதிர்ப்பி ஆக செயல்பட்டு நம் வாயில் உள்ள பக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. பல் வலி மற்றும் ஈறுகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமானம்
‌இரண்டு துளிகள் மிளகு கீரை எண்ணெய் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது திராட்சை விதை எண்ணெயுடன் கலந்து வயிற்றில் மசாஜ் செய்து வந்தால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. குடல் இயக்கதை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

தலைவலி
தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கண்ணில் படாமல் உபயோக படுத்த வேண்டும்.

மனசோர்வு, பதற்றம் போன்றவற்றை சரிசெய்கிறது
இதன் நறுமணம் உடலையும் மனதையும் தளர்த்த உதவுகிறது. மனசோர்வு, பதற்றம், தூக்கமின்மை போன்றவற்றை சரிசெய்கிறது.

மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது
ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை மிளகு கீரை எண்ணெய் 30 நொடிகள் நுகரும் போது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது மேலும் கவனிக்கும் திறனையும் நிலைபடுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சருமத்தில் இவை எண்ணெய் உற்பத்தியை தூண்டுவதால் உலர்ந்த சருமம் உள்ளவர்கள் மற்றும் உலர்ந்த முடி உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தலையில் மசாஜ் செய்வதால் ‌பொடுகு மற்றும் பேன்கள் நீக்குகிறது.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்:

அத்தியாவசிய எண்ணெய் தாவரத்தில் இருந்து பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். ஆய்வகங்களில் செயற்கை முறையில் பெறப்பட்டவையாக இருத்தல் கூடாது.

நீர்த்த எண்ணெய்களை நேரடியாக சருமத்தில் உபயோகப்படுத்தக்கூடாது. அப்படி உபயோகிப்பதால் தோல் எரிச்சல் உண்டாகும். சில எண்ணெய்கள் மட்டும் பயன்படுத்தலாம் லேவன்டர், டீ ட்ரீ எண்ணெய் உபயோகபடுத்தலாம்.

அத்தியாவசிய எண்ணெய் தூய்மை ஆனாதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

தோல் உணர்திறன் சோதனை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

மியூகஸ் படலம் எரிச்சலடைய செய்யும் எண்ணெய்களை உபயோக படுத்தக்கூடாது.

அத்தியாவசிய எண்ணெய் செறிவூட்டப்பட்ட, அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் உபயோகப்படுத்தப்படும் போது எடுத்துகொள்ளும் அளவு எவ்வளவு என்பதையும், எந்த விதமான முறையில் அதாவது வாய்வழியாக எடுத்துக் கொள்வது, நீராவி‌ பிடிப்பது, மசாஜ் செய்வது, கைக்குட்டையில் நுகர்ந்து பார்த்தல், குளியல் தொட்டியில் உபயோகிப்பது போன்ற முறைகளில் எந்த முறையில் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை ‌மருத்துவரின்‌ ஆலோசனை கேட்டு ‌உபயோகப்படுத்த வேண்டும்.