முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க இவற்றை பின்பற்றுங்கள்

69383
69383

பொதுவாக பெண்களுக்கு தீராத பிரச்சனையே முகத்தில் எப்போதும் ஒட்டி கொண்டிருக்கும் கரும்புள்ளி தான்.

முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும்.

அதற்காக நீங்கள் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. இதனை உடனடியாக போக்குவதே சிறந்து.

அந்தவகையில் தற்போது கரும்புள்ளி பிரச்சினையை போக்க கூடிய ஒரு சில எளிய இயற்கை வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை
உருளைக்கிழங்கு -1
பப்பாளிப்பழம் – 1 துண்டு
கெட்டித்தயிர் – 1 தேக்கரண்டி
பாசிப்பயறு மாவு – அரை தேக்கரண்டி
சுத்தமான தேங்காயெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவி துருவலாக சீவி கொள்ளவும். அதை அழுத்தி விரல்களால் தேய்த்தாலே சாறு வெளியேவரும்.

பப்பாளிப்பழத்தில் தோல் விதை நீக்கிய பிறகு அதை கரண்டியால் மசித்து கட்டி தட்டாமல் இதில் சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு பாசிப்பருப்பு மாவும், தயிரும் சேர்த்து கலக்கவும். அதிக இறுக்கமாக இருந்தால் தயிர் கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

பிறகு இதில் சுத்தமான தேங்காயெண்ணெய் கலந்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கலவையை வைக்கவும்.

முகத்தை கழுவி உலரவைத்து இந்த கலவையை முகத்திலும் கழுத்துப்பகுதி வரையிலும் கீழிருந்து மேலாக போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.