இயற்கையான முறையில் நுரையீரலை சுத்திகரிக்கும் வழிமுறைகள்

sss 1
sss 1

நம் உடல் உறுப்புகளில் இந்த நுரையீரல் மிக முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. நமது மூச்சுகாற்றை சுத்திகரித்து தரும் முக்கிய வேலையை செய்வதே இந்த நுரையீரல் தான். நுரையீரைலைப் பாதிப்பில்லாமல் வைத்திருக்கும் வரை மூச்சு சீராக இருக்கும்.

காற்று மாசுபாடு, பணியிட வாயுக்கள், புகைப்பிடித்தல் போன்ற காரணங்கள் நுரையிரல் மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதனால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காச நோய், எம்பிஸிமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்றவைகளாலும் ஏராளமான நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

இயற்கை முறையில் நுரையிரலை சுத்தமாக வைத்திருப்பது எப்படி :

  • 01. இஞ்சியை கிரீன் டீயுடன் சேர்த்து பருக, வியர்வையின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். தூங்குவதற்கு முன்பு, கிரீன் டீ பருகி வர நல்ல பயனை அளிக்கும்.
  • 02.புதினா இலைகளை மூன்று அல்லது ஐந்து எடுத்து தினமும் மென்று வர, நுரையீரலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அது வெளியேற்றிவிடும். மேலும், 20 நிமிட வெந்நீர் குளியல் மற்றும் தினமும் அரைமணி நேர யோகா பயிற்சியின் மூலமாகவும் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றலாம்.
  • 03.உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
  • 04.பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது அவசியம். முதல் நாள் இரவு படுக்கைக்கு முன்பாக ஹெர்பல் டீயை அருந்த வேண்டும், இது உடலிலுள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது.
  • 05.காலை உணவுக்கு முன்பாக 300 மிலி தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும். காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே 300 மிலி கேரட் சாறை அருந்தலாம்.