பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள்

download 11
download 11

பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது.

அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம்.

நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான மிளகாய் எவ்வகையான நோய்களை தடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மருத்துவ பயன்கள்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்

பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்பின்ஸை உற்பத்தி செய்யும், இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது.

பச்சை மிளகாயில் விட்டமின் ஈ யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.

பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை, தலைமுழுகி வந்தால் எந்த வகையான தலைவலியும் குணமாகும்.