தேனில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!

333
333

இயற்கையாகவே சத்தும் சுவையும் உள்ள உணவு தேன். தேனில் வைட்டமின் பி2,பி6 H(பளோடின்), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கல்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

தேன் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த ஆரோக்கியமான உணவுப் பொருளை நீங்கள் உண்ணும் விதம் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து உடலுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.

தேன் எவ்வாறான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது:

தேன் மூலம் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக உள்ளது.

தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்ணும் முன் சுத்தமான தேனை ஒன்று முதல் 3 தேக்காரண்டி எடுத்து கொண்டு ஆறிய சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் இரைப்பை அழற்சி, ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழம் சாறுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி சரியாகும்.

உடல் எடை குறைப்பு

தேன் சாப்பிடுவது நமது உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். சூடு தண்ணீரில் தேனை கலந்து தினந்தோறும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கலாம்.

வாந்தி, சளி மற்றும் தலைவலி

தேன் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை கலந்து குடித்தால் வாந்தி, சளி மற்றும் தலைவலிக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கண்பார்வை

தேனுடன் வெங்காயச் சாற்றை கலந்து குடித்தால் கண்பார்வை தெளிவு பெரும். மேலும், பலவகையான கண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆஸ்துமா

தேன், பால் மற்றும் முட்டை ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.