சரும சுருக்கத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவும் அழகு குறிப்புகள்

1571295148 5003
1571295148 5003

பொதுவாக 50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு சந்திப்பார்கள்.

முதுமைத் தோற்றத்தை தரும் சுருக்கம் இல்லாமலும் இருப்பதற்கு, உணவுகளை உண்பதோடு, அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு பராமரிக்க வேண்டும்.

அதுவும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி பராமரிப்பதே சிறந்தது. அந்தவகையில் தற்போது அந்த இயற்கை பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேனையும், ரோஸ் வாட்டர்

200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்துக்கொள்ளவும்.

அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும். சுருக்கங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காது.

முட்டை

இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும்.

அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங் களை மங்க செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

தேன் மெழுகு

50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 தே.க தேன், ஒரு தே.க கோதுமை எண்ணெய், ஒரு தே.க ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும்.

அது குளிர்ந்ததும் 2 தே.க பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். பின்பு அதனை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பயன்படுத்தலாம்.