பாகற்காய் அதிகளவு உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

666
666

பெரும்பாலான மக்கள் பாகற்காயிலுள்ள கசப்பு சுவையால் அதை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர். வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல நோய்களை குணமாக்கவல்லது. இருப்பினும் இதை அதிகளவு சாப்பிட கூடாது. ஏனெனில் இது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

பாகற்காய் அதிகளவு உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

  • 01. அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
  • 02. மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும் போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.
  • 03. கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, ஏனெனில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • 04. பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.