பாதங்களை அழகாக்கும் சில எளிய குறிப்புகள்

feet001
feet001

நிறையப் பேருக்கு முகம் அழகாக இருக்கும். அவர்களுடைய கால் பாதங்களை பார்க்கும்போது, இந்த முகத்திற்கு சொந்தமான கால் பாதமா இது! என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கருப்பு நிறமாக தோற்றமளிக்கும்.

குளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.

மனதுக்கும் பாதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தொடர்புடைய பாதத்தை நாமோ அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

பாதத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்னைகள், அதற்கான சிகிச்சைமுறைகள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பாதத்தை பராமரிக்க வேண்டிய அவசியம்.

வெதுவெதுப்பான தண்ணீர்

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்

உங்கள் பாதங்களை பார்த்து கொள்ள சில குறிப்புகள்:-

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும்.

மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்

படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

உங்கள் பாதங்களை தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீரில் (சுடுநீர் வேண்டாம்) நன்றாக சோப்பு போட்டு கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள்.

காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பொருள் இல்லாதபடி ஷூக்களை மேலும் கீழுமாக கவிழ்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.