சிறுநீர் நுரை போன்று வெளியேறுகிறதா? அவசியம் இதை படியுங்கள்

health news image 303
health news image 303

சிறுநீர் நுரையாக வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எப்போதும் சோர்வாக உணர்வது போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளை பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது.

உடல் சோர்வு
ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.

சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

சிறுநீரில் நுரை
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.

சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம், உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம் பெயர்க்கும்.

சுவாசப் பிரச்சினைகள்
சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது.

மற்றொன்று, ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.