வெற்றிலை போடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

maxresdefault 2
maxresdefault 2

அந்த காலத்தில் இருந்து இந்த நவீன காலம் வரையில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.

இதுமட்டு மல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.

வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் எங்களை நெருங்காது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.

உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய வெற்றிலை போடும் பழக்கத்தை பலர் தவறான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.

இன்று பலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு புகையிலையிலையும் சேர்த்து சாப்பிடுவது தீய பழக்கமாகும்.