அதிகமான மருத்துவ பயனை அள்ளி தரும் புதினா!

download 38
download 38

புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

இதை எப்படி எடுத்துகொண்டாலும் இதன் குணங்கள் மாறாது என்பதோடு இதை எப்படி உணவில் சேர்த்தாலும் சுவை அதிகரிக்க கூடும்.

புதினாவானது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும்.

அந்தவகையில் தற்போது புதினாவை எப்படி எடுத்து கொண்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என பார்ப்போம்.

கர்ப்பகால வாந்தி
புதினா இலையை சுத்தம் செய்து உரலில் இட்டு இடித்து அதன் சாறை பிழிந்து எடுக்கவும்.

இதை வடிகட்டி ஒரு பெரிய டம்ளரில் எடுத்து சீமைக்காடி அல்லது ஒரு டம்ளர் நீர் சேர்த்து இந்த திரவத்தில் மூன்று மடங்கு சர்க்கரை கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.

கர்ப்பகாலத்தில் வாந்தி வரும்போது ஒரு தே. க அளவு அப்படியே வாயில் போட்டு அடக்கி சிறிது சிறிதாக உமிழ்நீரோடு கலந்து விழுங்க வேண்டும்.

இப்படி செய்தால் வாந்தி உணர்வு இருக்காது. கர்ப்பிணிகளுக்கு மட்டும் இல்லாமல் வாந்தி வரும் அனைவருமே இதை சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு
பழுப்பு நிற இலைகளை நீக்கி புதினா இலைகளை எடுத்து சுத்தம் செய்து மண் சட்டியில் வதக்கவும்.

பிறகு ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சவும். அது அரை டம்ளராக மாறும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும் இந்த நீரை ஆறவைத்து குழந்தைகளுக்கு காலை மாலை 5 தே .க அளவு கொடுத்து வந்தால் போதும். வயிற்றுப்போக்கு படிப்படியாக குறையும்.

பல் கோளாறுகள் நீங்க
புதினா இலைகளை அலசி காயவைக்க வேண்டும். அவை நொறுங்கும் அளவு காய்ந்தது, அதை எடுத்து உரலில் பொடிக்கவும். ஒன்றிரண்டாக பொடித்த புதினா தூளுடன் நான்கில் ஒரு பங்கு உப்பு சேர்த்து மீண்டும் இடித்து சல்லடையில் சலிக்கவும்.

தினமும் இந்த பொடியில் பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் மட்டும் அல்லாமல் பல் சம்பந்தமான கோளாறுகள் எதுவுமே வராமல் தடுக்கலாம்.

குமட்டல் நிற்க
கைப்பிடி அளவு புதினாவை எடுத்து சிறு நெல்லி அளவு புளி சேர்த்து மிளகு 10 சேர்த்து அம்மியில் மைய அரைக்கவும்.

இதை மண்சட்டியில் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி அப்படியே அல்லது வடிகட்டி அதன் சாறை சிறிது சிறிதாக குடித்துவந்தால் குமட்டல் உணர்வு நிற்கும்.

மாதவிடாய் பிரச்சனை
ஒரு கிலோ அளவு பெரிய கட்டு கொண்ட புதினா இலையை வாங்கி சுத்தம் செய்து அதை வெயிலில் காயவைக்கவும்.

அவை நன்றாக காய்ந்து நிழலில் உலர்த்த வேண்டும். சருகு போல் ஆகும் வரை விட்டு பிறகு மிக்ஸியில் பொடித்து சல்லடையில் சன்னமாக சலித்துவைக்க வேண்டும். பிறகு அந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

தினமும் காலை மற்றூம் இரவு நேரத்தில் முக்கால் தே. க அளவு பொடியுடன் தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தடைபட்ட மாதவிலக்கு சீராக வரக்கூடும். மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய உபாதைகளும் குறையும்.