திடீர் யோகம் கிட்டும் நாள்

7
7

மேஷம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் தாமதம் ஆகும் நாள்.

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனவசதி பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்: இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அழகும் இளமையும் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நிலை பாதிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

துலாம்: கோபத்தை கட்டுப்படுத் துவதற்கான வழிகளை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடர் வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்.