புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள்

1 8
1 8

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்
திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீங்கள் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் அனைத்தும் முடி
யும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புதுமையான விஷயங்கள் நடக்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடு
களை சமாளிக்க வேண்டி வரும்.சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டிய நாள் .

துலாம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்
பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத் தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு டென்ஷன் வந்துப் போகும். புது வேலைஅமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்
களால் ஆதாயமுண்டு. நன்மை கிட்டும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள் விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மீனம்: கணவன் – மனைவிக்குள் இதுவரை இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மகிழ்ச்சியான நாள்.