ரொனால்டோவின் ஆலோசனை!

NINTCHDBPICT000540043427
NINTCHDBPICT000540043427

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக போர்த்துக்கல் அணி வீரர்களுக்கு  ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைத்தது. இந்தக் கொடுப்பனவில் 50 வீதத்தை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நன்கொடை வழங்க கிறிஸ்டியானோ ரொனால்டோ  ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தகுதி பெறுவதற்கு போர்த்துக்கல் வீரர்கள் காட்டிய திறமைக்காக ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஐரோப்பியக் கிண்ணம் இந்த பருவகாலத்தில் நடத்த திட்டமிடப்படிருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்தத் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எமது கொடுப்பனவில் 50 வீதத்தை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நன்கொடைக்கு வழங்க எமது வீரர்கள் முன் வரவேண்டும் என இணையத்தள செய்திச் சேவையொன்றுக்கு கூறியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாம்  ஐரோப்பியக் கிண்ணத்துக்கு  தகுதிபெற்றுள்ளோம். அது 2021 இல் நடைபெறவுள்ளது.  எமது ஊக்குவிப்புக் கொடுப்பனவில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க ஆலோசனயொன்றை முன் வைக்கிறேன். எமது தேசிய அணி வீரர்கள் எமக்கு கிடைத்த ஊக்குவிப்புக் கொடுப்பனவில் 50 வீதத்தை நன்கொடை செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்”  என்றார்.

போர்த்துக்கல் தேசிய அணி வீரர்கள் வழங்கும் இந்த நன்கொடையானது, போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனத்தின் கொரோனா வைரஸ் நெருக்கடியால் தத்தளிக்கும் தொழில்முறையற்ற கழகங்களுக்கு உதவும் நிதிக்கு செல்லவுள்ளது என போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக ரொனால்டோ ஏற்கனவே பல உதவிகளையும் செய்துள்ளார். போர்த்துக்கலில் இருக்கும் வட லிஸ்பன் பல்கலைக்கழக மருத்துவமனையில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுகளையும்,  போர்டோஸ் சான்டோஸ் அன்டோனியோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை அமைக்கவும் உதவி புரிந்தார்.