சற்று முன்
Home / விளையாட்டு / ஓராண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ள சங்கக்காரவின் பதவி!

ஓராண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ள சங்கக்காரவின் பதவி!

லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பிற்கு (எம்.சி.சி.) தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா உள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையால் கிளப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டாதால் இவரது பதவி காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவர் அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் வரை இந்த பணியை தொடங்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (24) ஆம் நாள் நடக்கவுள்ள இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பதவி காலம் ஓராண்டாகும். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

x

Check Also

சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு!

தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனியாக யூ ...