டோனியின் வெளியான புகைப்படத்தினால் கவலையில் ரசிகர்கள்

625.0.560.350.160.300.053.800.668.160.90
625.0.560.350.160.300.053.800.668.160.90

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின், சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி, அவரது ரசிகர்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத டோனி, ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் தொடரும் தள்ளிப் போகிறது. இதனால் டோனி எப்போது மீண்டும் மைதானத்திற்குள் இறங்குவார் என்று அவர்கள் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் டோனி அந்தளவிற்கு ஆக்டிவ்வாக இருக்கிறாரோ, இல்லையோ, அவரது ரசிகர்கள் தினந்தோறும் அவரின் புகைப்படம் மற்றும் வீடியோ என ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்து டிரண்டாக்கி வருவர்.

இந்நிலையில், டோனி பண்ணை வீட்டில் இருக்கும் தோட்டத்தை டிராக்டர் மூலம் உழுவது போல ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.

அதைத் தொடர்ந்து, தற்போது, கடந்த சில தினங்களாகவே வயதான தோற்றத்துடன் இருப்பது போன்ற டோனியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தில் சிறிய தலைமுடியுடன், தாடி எல்லாம் நரைத்து, கண்ணம் ஒட்டி பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்றே வயதானவர் போல டோனி காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சிலர் சிங்கம் மாதிரி இருந்த எங்களது தல இப்படி ஆகிவிட்டாரே என்பது போன்று தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் டோனி வீட்டிற்கு திரும்பும்போது மீண்டும் அதே பழைய தலயாக, கெத்தாக திரும்புவார் என்றும் சிலர் பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது