அடுத்த நான்கு மாதங்களுக்கு காபந்து அரசாங்கம்

gotabaya ranil
gotabaya ranil

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பில் நான்கு மாத கால இடைவெளிக்குள் பொதுத் தேர்தலை நடத்துவது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதுவரை கோத்தாய ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமித்து காபந்து அரசை நியமிப்பது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு பதவி விலகி நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.