எளிய முறையில் நடைபெற்ற செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமணம்!

17
17

தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள், ரசிகைகளை அதிகம் பெற்ற சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. அதிக TRP யும் இந்த சீரியல் பெற்றது.

zee தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் ஹீரோவாக ஆதி கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கை ஒரு தலை பட்சமாக உமா கேரக்டர் ஜெனிஃபர் காதலித்து வருவார். அவருக்கு கடந்த மாதம் 25 ம் தேதி எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சீரியலுக்கு முன்பே அவர் சரவணன் என்பவரை காதலித்து வந்தாராம். இருவீட்டிலும் திருமணத்திற்கு பெற்றவர்கள் சம்மதித்தனர்.சீரியலுக்கு பின் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிருந்த அவர்கள் அண்மையில் சென்னையில் எளிய முறையில் திருமணம் செய்துள்ளனர்.

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக ரசிகர்கள், ரசிகைகளை பெற்ற சீரியல்களில் செம்பருத்தியும் குறிப்பிடத்தக்கது,