பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் அடித்துக்கூறும் தமிழக ஜோதிடர்.

21
21

சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என சரியாக கணித்து கூறிய செய்தி அதிகளவில் பேசப்பட்டது.
அகில இந்திய அளவிலான, ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும் அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் திகதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், பின் இந்த சம்பவம் உண்மையானதும் இவரிடம் ஜோதிடம் பார்க்க பலர் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் இவர், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள பாலாஜி ஹாசன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

அப்படி பார்த்தால் இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்டுள்ள ஆண் போட்டியாளர்கள், இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் ஆகியோர் தான். அதே போல் இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போவது ஒரு பெண் போட்டியாளர் என கூறியுள்ளார். ஒரு வேலை லொஸ்லியா அல்லது ஷெரின் இறுதி வரை செல்லும் போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதால் இரண்டாவது இடத்தை இவர்கள் பிடிக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளார்.