கேரள பாரம்பரிய கலை நடன தோற்றத்தில் கட்டிப்பிடி வைத்தியம் சினேகன்

23
23

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். அவர் மீது கட்டிப்பிடி வைத்தியம் என்ற விமர்சனங்கள் நிறைய எழுந்தன.


அதே வேளையில் அவரின் தலைமை பண்பு பாராட்டப்பட்டது. பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ள அவர் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ரமேஷ் மகாராஜா இயக்கத்தில் பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் அமீர் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் கேரள பாரம்பரிய கலை நடன தோற்றத்தில் சினேகன் இருப்பது பலரையும் மிரட்டலாக்கியுள்ளது.