‘மகாமுனி’க்கு விமர்சகர்களின் பாராட்டு மழை!

3 3
3 3

‘மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் ‘மகாமுனி’ படம் குறித்து விமர்சகர்கள் பலர் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் இன்று விமர்சகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

மேலும், ஆர்யாவின் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சகர்களின் பாராட்டுகளை குவித்து வருகின்றது.