விண்வெளி வரலாற்றில் புது திருப்பம் – நாசா அறிவிப்பு

iss050e012234 0 1024
iss050e012234 0 1024

விண்வெளியில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ மார்கன் மற்றும் லுகா பர்மிடனோ ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர்.

6 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த பணியானது நீடித்தது.

இதன்போது கத்திரிக்கோல், கம்பி வெட்டிகள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, வெற்றிடத்தில் இரும்பு பொருட்களை வெட்டி அகற்றி கோளாறு சரிசெய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.