உங்கள் பாதங்கள் பளிச்சிட வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்

 பாதங்களை பெற இயற்கை வழிமுறைகள்
பாதங்களை பெற இயற்கை வழிமுறைகள்

உடலின் அழகை பராமரிக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அந்த அளவு பராமரிப்பு பாதவெடிப்பிற்கு வழங்குவதில்லை.

நமக்கு கால்களில் இருப்பதால், அது வெளியில் தெரியாது என்று நினைக்கிறோம். உண்மையில் பாத வெடிப்பு மிகவும் ஆபத்தானது.

மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சள் பொடியாக்கி அம்மி அல்லது மிக்ஸியில் வைத்து அரைக்கவும். இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள்.

அகலமான பாத்திரத்தில் பொறுக்கும் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை வைத்திருந்து பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்க்கவும். பாதங்களில் உள்ள அழுக்குகள், வெடிப்புகள் நீங்கி பாதம் பொலிவாக அழகாக இருக்கும்.

உங்களால் குனிந்து பாதங்களைப் பிடித்து இலேசாக ஸ்கரப் செய்ய முடிந்தாலோ மெல்லிய ப்ரஷ் கொண்டு அழுக்கு போக தேய்க்க முடிந்தாலோ இன்னும் நல்லது. அல்லது யாரையேனும் செய்ய சொல்லுங்கள். இதனால் பாத நரம்புகள் தூண்டப்படும்.

அதே போன்று சாம்பார் வெங்காயத்தின் சாறை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பற்றுபோட்டாலும் பாத வெடிப்பு நீங்கிவிடும்.