உங்கள் மொபைலின் கடவுச்சொல் மறந்துவிட்டால்…

reset password pic1
reset password pic1

இந்திய மொபைல்சந்தையில் தற்சமயம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது.

குறிப்பாக சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும், ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

மொபைலில் உள்ள எஸ்எம்எஸ், மற்றவர்களின் தொடர்பு எண்கள், ஆப்ஸ், போன்ற அனைத்து தரவுகளும் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போது மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

வழிமுறை-1: உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், முதலில் மொபைலை ரீசெட் செய்த பின்பு, பவர் ஆஃப் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து உங்கள் மொபைலின் VOLUME BUTTON, பவர் பட்டன், ஹோம் பட்டன் போன்றவற்றை ஒன்றாக அழுத்த வேண்டும்.

வழிமுறை-3: அதன்பிறகு மொபைலில் ஆண்ட்ராய்டு லோகோ காணப்படும், பின்பு பல்வேறு பட்டியல் உங்கள் மொபைலில் இடம்பெறும்.

வழிமுறை-4: அதன்பின்பு கொடுக்கப்பட்ட பட்டியலில் wipe cache partition-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-5: அடுத்து wipe data/factory reset-எனும் விருப்பத்தையும் கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஆம் அனைத்து பயனர் தரவு நீக்கு (yes-delete all user data) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-6: கடைசியாக reboot system now-என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் மொபைலை பழையபடி உபயோகம் செய்யமுடியும்.