தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான எச்சரிக்கை!

37681533 family and happy people concept mother kissing her baby
37681533 family and happy people concept mother kissing her baby

பொதுவாக பிரசவ காலங்களிலும் பிரசவத்திற்கு பின்னரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிலும் தாய்பால் ஊட்டும் பெண்கள் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.

சில உணவு வகைகள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.அந்தவகையில் தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

தேநீர் உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள். முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.

காபி தாய்ப்பாலில் சேரும்போது இது குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்.

சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.