தொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட செய்தி!

samsung galaxy fold 5 840x447
samsung galaxy fold 5 840x447

சீனாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு சாதன வடிவமைப்பு நிறுவனமான ZTE ஆனது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

ஸ்ட் Axon 10s Pro எனும் குறித்த கைப்பேசியானது Qualcomm Snapdragon 865 mobile processor உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியின் அறிமுகமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள CES நிகழ்வில் அல்லது பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள MWC நிகழ்வில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.