சுவாசிக்க முடியாமல் திணறும் மீன்கள்

Fastest Fish img
Fastest Fish img

காலநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து மாசு காரணமாகப் பெருங்கடல்களில் கடல்வாழ் உயிரிகள் ஓட்சிசன் இல்லாமல் திணறுகின்றன.

இதன் காரணமாகப் பல மீன் வகைகள் அழிவும் நிலைக்குச் சென்றுள்ளன. ஐ.யு.சி.என். அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கடல்களில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு முன்பே தெரிந்ததுதான் என்றாலும், காலநிலை மாற்றமானது ஓட்சிசன் பற்றாக்குறை ஏற்படுத்தி உள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

1960ஆம் ஆண்டில், பெருங்கடலில் 45 இடங்களில் இவ்வாறான பற்றாக்குறை இருந்தது. இப்போது 700 இடங்களாக அதிகரித்துள்ளது.

ஓட்சிசன் குறைவது, டுனா, மர்லின் மற்றும் சுறா ஆகிய மீன் வகைகளின் இருப்பை அச்சுறுத்தலாக்கி உள்ளது.