போயிங் ‘737 மேக்ஸ்’ ரக விமானங்களுக்கு தடை

boeing
boeing

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ தயாரித்த ‘737 மேக்ஸ்’ ரக விமானங்களை உலக நாடுகளில் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘போயிங்’ ‘737 மேக்ஸ்’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் பலியாகினர். அந்த விமானங்களில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.

இது தொடர்பாக குறித்த விமானத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட வேளை விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து 2020 இற்கு முன்னர் ‘737 மேக்ஸ்’ விமானங்கள் சேவைக்கு திரும்புவதை அங்கீகரிக்க முடியாது என்று அமெரிக்க போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.