நடிகைகள் போல வரவேண்டுமா? இதனை பயன்படுத்துங்கள்

kadalai maavu 28palagara kadalai maavu 29 500x500
kadalai maavu 28palagara kadalai maavu 29 500x500

கடலை மாவு என்பது கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இது சமையலுக்கு மட்டுமின்றி சருமம் பிரச்சினைகளை கூட எளிதில் தீரக்க கூடிய ஒரு பொருளாகும்.கடலை மாவை அக்காலத்தில் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள்.

கடலை மாவு அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்கும். அதில் வெயிலால் கருமையான சருமம், முகப்பரு அல்லது பொலிவற்ற முகம் போன்ற எந்த பிரச்சனையானாலும் கடலை மாவைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது கடலை மாவை கொண்டு சருமத்தை எப்படி பொலிவுறச் செய்வது என்பதை பார்ப்போம்.பொலிவிழந்த சருமத்தை இளமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும்.நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.

எண்ணெய் பசை நீங்க ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.