சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு

cover 1569403360
cover 1569403360

இன்சுலின் உடலின் வளர்வினை மாற்றத்திற்கான முதன்மை இயக்குநீராகும். இது கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் மற்றும் புரதங்களின் வளர்சிதைமாற்றத்திற்கு காரணமாகின்றது.

முக்கியமாக குருதியிலிருக்கும் குளுக்கோசை கல்லீரல், கொழுப்புக் கலங்கள், எலும்புத்தசை கலங்கள் உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றது.

இந்த இன்சுலின் அதிமாக சுரந்தால் பல பாதிப்புக்கள் ஏற்படுத்தி விடுகின்றது. அதில் குறிப்பாக டைப் 2 டயாபெட்டீஸ், உயர் இரத்த அழுத்தம், கல்லீரலில் கொழுப்பு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி குழாய்கள் கடினமாகி இதய நோய்கள் வரக் கூட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே நீங்கள் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியமாகும்.

இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் சிறிது இலவங்கப்பட்டையை தூவி உண்ணலாம். உங்கள் சுவையும் கூடும், அதே நேரத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளரில் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள்.

டயாபெட்டீஸ் நோயாளிகள் இயற்கையாகவே நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடலாம்.ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை இருந்தால், குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காராமல் அடிக்கடி உடற்பயிற்சி செய்து வாருங்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் போது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.