வட்ஸ்அப் இல் கோளாறா?

58881
58881

பிரபல குறுஞ்செய்தி விண்ணப்பமான வட்ஸ்அப் இல் கோளாறு ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழுவாக இணைந்து சட் செய்யும் வசதியிலேயே இக் கோளாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சட் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிந்துபோவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவில் இணைந்துள்ள அனைவருக்கும் இப் பிரச்னை ஏற்படுவதாக ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் புதிய வட்ஸ்அப்பில் பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2.19.58 எனும் பதிப்பினை பதிவேற்றம் செய்வதன் மூலம் இப் பிரச்னையை தவிர்க்க முடியும்.

இதேவேளை உலகெங்கிலும் சுமார் 1.5 பில்லியன் வட்ஸ்அப்பில் பயனர்கள் உள்ள நிலையில் நாள்தோறும் 65 பில்லியன் குறுஞ்செய்திகள் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.